நெல்லையில் 20 நாட்களில் 3 யாணைகள் மரணம் வனத்துறை விசாரனை

காரையாறில் இருந்து பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள இஞ்சிகுழி பகுதியில் ஆற்றில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று பார்த்தபோது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானை எவ்வாறு இறந்தது என்பதை அறிய வனத்துறை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளத்தாக்கில் தவறி விழுந்து யானை இறந்தது தெரிய வந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணையில் இதே போல் பெண் குட்டி யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதனை பிரேத பரிசோதனை செய்த பின்பு உடலில் பாதி பகுதியை முதலைகள் கடித்து சிதைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு மேற்கு தொடா்ச்சி மலையில் புளியரை மலைப்பகுதியில் மிளகரைச்சான்பாறை பகுதியில் உள்ள ஓடையில் பெண் யானை இறந்துகிடப்பதாக செங்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் கெளதம் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
சுமாா் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஓடையில் தவறி விழுந்து இறந்துள்ளது. இந்த யானை இறந்து 4 நாள்கள் இருக்கலாம். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இப்பகுதியில் புதைக்கப்படும் என்றாா் அவா்.

கடந்த 20 நாட்களில் நெல்லை மாவட்டத்தில் 3 யானைகள் இறந்த சம்பவம் யாணை ஆர்வலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial