கொரோனாவில் மக்களுக்கு உதவி செய்யும் நபர்கள் பதிவு செய்ய வேண்டும்

கொரோனாவில் மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

அறிக்கை….
நமது மாண்பமிகு தமிழக முதல்வர் அவர்கள் 19.05.2021 அன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கோவிட் -19 தொற்று பரவல் நடவடிக்கைகள் குறித்து நடத்திய கூட்டத்தின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் இதற்கிணையான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து கோவிட்-19 தொற்று பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு தேவையான தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு பொருட்கள், சிகிச்சைப் பொருட்கள், தன்னார்வலர்கள், வாகன ஆதரவு. இரத்த தானம், உணவு பொருட்கள், தானியங்கள், தொலைபேசி ஆலோசனை மற்றும் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்ற கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்து மாவட்ட அளவில் அமைக்கபட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு விவரம் தெரிவிக்கப்படுகிறது.

Registration Link: https://ucc.uhcitp.in/ngoregistration

மின்னஞ்சல் முகவரி: 1. msktirunelveli@gmail.com கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 9788737276

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial