108 ஆம்புலன்சில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து

கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. நோயாளியை அழைத்து வந்த இந்த ஆம்புலன்சில் யாரும் இல்லாத வேளையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆம்புலன்சில் தீ விபத்து ஏற்பட்டவுடனே அருகிலிருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முழுவதுமாக தீயை அணைத்தனர்.

இந்த ஆம்புலன்சில் சில பழுதுகள் உள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial