2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் வி கே சசிகலா !

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் வி கே சசிகலா !?

சசிகலா கடந்த 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார் . சசிகலா சிறை சென்றதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது . 2027 வரை இந்த தடை தொடரும் .

 

இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவால் போட்டியிட முடியாது . இதனை சட்டரீதியாக உடைக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் . சீக்கிய மாநிலத்தில் அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கு சிறை சென்றார் .

 

2018 ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் , 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்பட்டது . இருப்பினும் அவர் தேர்தல் ஆணையத்தில் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனு அளித்தார் . அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு சலுகை வழங்கியது .

 

இதேபோன்று சசிகலாவுக்கும் சலுகை பெற்றுவிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர் . இதற்காக அவரது வழக்கறிஞர்கள் , சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் . சில முக்கிய முடிவுகள் எடுத்து தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial