முருக பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தூத்துக்குடி எஸ்பி

திருச்செந்தூர் பக்தர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

தென் தமிழகத்தில் தைப்பூச திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். தைப்பூசத் திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து தைப்பூச திருவிழாவை தரிசித்துச் செல்வார்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து இருந்தனர். அவர்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்காக தாங்கள் கொண்டு வந்திருந்த விரிப்புகளுடன் கோவில் வளாகத்தில் தயாராகினர்.

அப்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு தயாரான பக்தர்களிடம் தற்போது கொரோனா காலம் என்பதால் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி பக்தர்களை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.இதனால் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உடனடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு நேரில் விரைந்து வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு வசதியாக இந்து சமய அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்தார்.

பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் விரிப்புகளை விரித்து படுத்து தூங்கினர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கையை கண்டு மகிழ்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial