பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

நரசிங்கநல்லூரில்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தொடங்கி வைத்தார்

கல்லூர்-சுத்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள நரசிங்கநல்லூர் நியாய விலை கடையில் தமிழக அரசின் ரூ. 2500 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அதிமுக செயலாளருமான தச்சை கணேசராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பள்ளிகொட்டை செல்லத்துரை, சுத்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் துரை என்ற ஆனைக்குட்டி பாண்டியன், செயலாளர் பரமசிவம், இயக்குனர்கள் கருப்பசாமி, வெள்ளையம்மாள், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், நரசிங்கநல்லூர் ஊராட்சி செயலாளர் நடராஜன், மகளிர் அணி சுத்தமல்லி ஜெயந்தி, கிளைச் செயலாளர்கள் சந்திரசேகர், பன்னீர் என்ற பெருமாள், சுடலை, பாஸ்கர், ஆறுமுகம், லட்சுமணன், தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி ஊராட்சி செயலாளர்கள் பிரகாஷ், குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial