பாளை பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை


பாளை ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளி ,பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் மற்றும் .வி.எம் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வித்யா கேந்தி ரா ஆகிய பள்ளிகளில் தங்களது 3 வயது குழந்தைகளை சேர்ப்பதற்காக குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

இதில் இயக்குனர் ஜெயேந்திரன் வி. மணி மற்றும் பள்ளி முதல்வர் , டீன் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வித்யாரம்பம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. பாளை ரகுமத் நகர் .ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாலர் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.பள்ளி தாளாளர் ஜெயபாலன் முன்னிலையில் முறைப்படி பூஜை நடைபெற்றப் பின் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் துவக்கி வைக்க பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மெர்சி விமலா, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர். அனைத்து நிகழ்வுகளும் சமூக இடை வெளியுடன் நடைபெற்றது.

 

 

 

 

வேல்ஸ் வித்யாலயா பள்ளி பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாலர் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், முதல்வர் சுகந்தி சொர்ணலதா, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். அனைத்து நிகழ்வுகளும் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் செல்வராஜ் செய்திருந்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial