நெல்லை அருங்காட்சியகத்தில்  இணையம் வழியாக கைவினைப் பயிற்சி.

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையம் வழியாக ஜூம் செயலி வாயிலாக கைவினைப் பயிற்சி நடைபெற்றது.


விசயதசமி  பண்டிகை முன்னிட்டு மிதக்கும் தாமரை விளக்கு தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. தற்போது நவராத்திரி பண்டிகை காலத்திற்கும், தீபாவளி பண்டிகைக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. இன்று இப்பயிற்சியை கலை ஆசிரியர் செல்லம்மா அவர்கள் நடத்தினார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர் எனவே இப்பயிற்சி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. இதுபோன்று பல்வேறு கலைப் பயிற்சிகள் தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் என்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial