நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை நான் ஏற்படுத்துவேன். முக கவசம் தவறாமல் அணிவேன். மற்றவர்களிடம் இருந்து குறைந்தது 6 மீட்டர் இடைவெளியை கடைபிடிப்பேன். சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை அடிக்கடி நன்றாக கழுவுவேன் என வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலின் போது 30 நிமிடம் அங்கு காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கக் கூடிய நிகழ்ச்சியை நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசு பாதம், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் காவலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial