தாமிரபரணியில் தர்ப்பணம் கொடுக்க தடை – ஆட்சியர் அதிரடி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில்

ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்தறைகளில் ஆண்டுதோறும்

ஆடி அமாவாசை நாளில் அதிகளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்கட்கும், திதி தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சமர்பிரதாயங்களை செய்வதும், நீராடுவதும்

வழக்கமாக இருந்து வருகிறது

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல்

காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 CRPC ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில்

மக்கள் கூடுவதால் நோய்த்தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும், பொது

மக்கள் நலன் கருதி 20.07.2020 ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு சமர்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோர இடங்களில் ஒன்று கூடுவதையும் ஆற்றில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகட்கு மாவட்ட

நிர்வாகம் எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைகட்கு முழு ஒத்துழைப்பு

நல்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial