பாம்புகள் பற்றிய சொற்பொழிவு – ஜூலை 16 பாம்புகள் தினம்

நெல்லை அருங்காட்சியகத்தில் இணைய வழியாக பாம்புகள் பற்றிய சொற்பொழிவு
ஒவ்வொரு வருடமும் ஜூலை 16 ஆம் நாள் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாம்புகளை பற்றிய அச்சத்தை போக்கி விழிப்புணர்வு கொண்டுவருவதே அத்தினத்தின் நோக்கமாகும். எனவே, இத்தினத்தின் நோக்கத்தை கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்துவதற்காக திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் விலங்கியல் துறையும் இணைந்து இணையம் வழியாக ஜூம் செயலி வாயிலாக ஜூலை 16 ஆம்தேதி காலை 11 மணியளவில் பாம்புகள் பற்றிய சொற்பொழிவு நடத்த உள்ளனர். இச்சொற்பொழிவில் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் முனைவர். சித்தி ஜமீலா அவர்கள், பாம்புகள் பற்றிய அரிய தகவல்களையும், பாம்புக்கடி குறித்தும் அவற்றிற்கான மருந்துகள் குறித்தும் சிறப்புரை வழங்க உள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 16/07/2020 அன்று காலை 10.50 மணிக்கு ஜூம் செயலி எண்: 85275230981 , கடவு சொல்: 437679 என்கிற தளத்தில் இணைய வேண்டும் . நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial