நெல்லையில் தடையை மீறி செயல்பட்ட 4 கடைகள் மூடல்

மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து பாளை மார்கெட்டில் தடைமீறி செயல்பட்ட 4 கடை களை வியாபாரிகள் உடனடியாக மூடினர்

பாளை காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள். நடராஜன் உள்ளிட்டோர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது மார்க்கெட் உள்பகுதியில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சில வியாபாரி கள், கடையை திறந்து அங்கு காய்கறி வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட 4 வியாபாரிகளிடம் உடனடியாக கடையை அப்பு றப்படுத்தி வெளியே கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுபோன்று செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து தடை மீறிவியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தங்களது கடைகளை உடனடியாக காலி செய்து அங்கிருந்து வெளியேறி னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial