நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணையத்தில் இலவச பயிற்சிகள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணையதளம் மூலம் கைவினைப்பொருள்கள் பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில்இணையதளம் வழியாக ஜும் செயலி மூலம் கைவினை பயிற்சிகள் நடைபெற்று வருகிறது

கெரோனோ தடை நீட்டிப்பால் நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடைபெறும் வாராந்திர நேரடி இலவச கைவினை பயிற்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பதில் ஆன்லைன் மூலம் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்களுக்கு கைத்தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று வாரங்களாக வால்ஹேங்கிங், பாட்டில் ஓவியம்,
கிளாஸ் பெயிண்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் இணையதளம் மூலம் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதுபோல் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் ஜும் செயலி மூலம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கைவினை பயிற்சிகள் நடைபெறும் என்று காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial