நெல்லையில் பிரபல கடைகளுக்கு சீல்

கெரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலியில் நோய்தொற்று அதிகமாக காணப்படுகிறது.


இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தினமும் மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி அடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாமல் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இடையே சமூக இடைவெளி கூட கடைப்பிடிக்காமல் மாநகராட்சி கூறிய எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் வைரஸ் தொற்று பரவ காரணமாக இருந்ததாக கூறி இன்று நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத பூர்விகா மொபைல், போத்தீஸ் சூப்பர் மார்க்கட், சோமசுந்தரம் செட்டியார் ஜீவல்லர்ஸ், GTM தங்க மாளிகை,மாரீஸ் ஜிவல்லர்ஸ் கடைகளுக்கு சீல் வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial