மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா அனுமதி

மணிமுத்தாறு அருவிக்கு இன்று (7ம் தேதி) முதல் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்பை பெற்ற இந்த அருவி புலிகள் காப்பக எல்லைக்குள் உள்ளதால், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
மாஞ்சோலை எனும் சொர்க்கத்திற்கு ஒரு பயணம் சென்று வரலாமா?

கடந்தாண்டு மே 18ம் தேதி அருவி ரோடு சீரமைப் புக்காக மலை பாதை மூடப்பட்டது. அவ்வப்போது, பணிகள் கிடப்பில் போடப்பட்டு இறுதியாக கடந்த ம் தேதி மீண்டும் மலை பாதை மூடப்பட்டு, கடந்த முதல் தேதி பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அன்றிரவு மலைப்பாதை போக்குவரத்து திறந்து விடப் பட்டது. மாஞ்சோலைக்கு, அரசு மற்றும் தேயிலை தோட்ட வாகனங்களும், சுற்றுலா வாகனங்களும் அனு மதிக்கப்பட்டன. இருப்பினும் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாவாக னங்கள் அனுமதிக்கப்படவில்லை இன்று (7ம் தேதி) முதல் மணிமுத்தாறு அருவிக்கு வழக்கமான நிபந்தனைகளுடன் குற்றுலாவாகனங்களை அனுமதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் அருவியில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் சூழல் உருவா கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *