நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பொங்கல் விழா

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமை வகித்தார். JCI Tirunelveli
trend setters தலைவர் திருமதி. சுப்புலட்சுமி, செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். JCI Tirunelveli
trend setters உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைக்கப்பட்டது. கோகுல் சிலம்பாட்டம் கழகம் சார்பில் மாணவர்களின் சிலம்பம் நிகழ்வு நடைபெற்றது. சிலம்பம் மாஸ்டர் கண்ணன் மாணவர்களை ஒருங்கிணைத்தார். தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். ஆசிரியர் திரு சோமசுந்தரம் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். மா.தி.தா. இந்து மேல்நிலை பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் அருங்காட்சியக வளாகத் தினை தூய்மைப் படுத்தினர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் சந்திர பாபு, நல் நூலகர் முத்துகிருஷ்ணன், லயன்ஸ் கிளப் தலைவர். திருமலை முருகன், ஓய்வு பெற்ற அருங்காட்சியக பணியாளர் வின்செண்ட், ஆசிரியைகள் காந்தி, அமலி,சொர்ணம், ஜிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial