விடுமுறைக்கால ஓவிய பயிற்சி முகாம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறைக்கால ஓவிய பயிற்சி முகாம்

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல்

பண்டிகையினை தொடர்ந்து உள்ள விடுமுறையினை மாணவ
மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்க நெல்லை அரசு
அருங்காட்சியகத்தில் சனவரி14 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி
வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஓவியப்பயிற்சி வகுப்புகள்
நடைபெற உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தினை சார்ந்த கட்டிட
வடிவமைப்பாளராக பணியாற்றி வரும், இளம் ஓவியர் திரு. பிரவீன்
தீபக், இந்த பயிற்சியினை அளிக்க உள்ளார். ஜனவரி 14 ஆம் தேதி காலை
10 மணியளவில் இவரின் தத்ரூப உருவ வரைபடங்கள், 3டி
வரைப்படங்கள், கட்டிடக்கலை வரைப்படங்கள் போன்ற அம்பத்திற்கும்
மேற்பட்ட வரைப்படங்கள் கண்காட்சி துவங்க உள்ளது. அதை
தொடர்ந்து ஒவியப்பயிற்சி நடைபெறும். இந்தப்பயிற்சியில் சிறியவர்கள்
முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
வரைவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் வரைப்படத்தாள்
ஆகியவற்றை பங்கேற்பாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0462- 2561915 என்கிற எண்ணை
தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர்
சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial