இன்றைய வானிலையை பொறுத்தவரை, சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாகை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, இந்த கடல் பகுதிகளுக்கு, மீனவர்கள் இன்றும், நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
படகுகளை, பாதுகாப்பாக கட்டி வைத்திருக்கவும். குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, கடலுக்குள், வேறு எந்த நடவடிக்கைகளுக்காக
வும் செல்ல வேண்டாம் என, இந்திய கடலியல் தேசிய மையம் அறிவித்துள்ளது.