யோகியை பாராட்டிய உச்சநடிகர்

வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்த நடிகர் யோகி பாபுவின் யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கோமாளி படத்தில் யோகி பாபுவின் காமெடி பலராலும் பாராட்டப்பட்டு ரசித்து பார்க்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தை யோகி பாபு ரஜினிக்கு திரையிட்டு காட்டினாராம்.

படத்தை பார்த்த ரஜினிகாந்த் யோகிபாபு மற்றும் படத்தின் இயக்குனர் இருவரையும் வெகுவாக பாராட்டினாராம். யோகி பாபு ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *