மோடியை சந்திப்பேன். ..ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீர் பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை. நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேசினேன். இந்திய பிரதமர் மோடியுடனும் பேசினேன். இருவரும் எனது நண்பர்கள். அவர்கள் பெரிய மனிதர்கள். அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிறார்கள்.

பிரான்சில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது நான் பிரதமர் மோடியை சந்திப்பேன். எனவே வார இறுதியில் நான் மோடியுடன் இருப்பேன். (பிரான்ஸ் நாட்டில் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு 24-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி முடிகிறது).

காஷ்மீர் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க நான் முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இங்கு இப்போதுதான் வந்து சென்றார். நான் இருவருடனும் நல்லுறவு வைத்துள்ளேன். காஷ்மீர் பிரச்சினை மிக கடினமான பிரச்சினையாக உள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் பீரங்கிகளையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே நான் இந்தநிலையில் உதவ நினைக்கிறேன். ஆனால் இவ்விரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன.

இதில் நான் மத்தியஸ்தம் செய்ய முடியும் அல்லது என்னால் இயன்றதை செய்ய முடியும். அவர்கள் இருவருடனும் எனக்கு சிறப்பான உறவு உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த தருணம், நண்பர்களாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *