ப.சிதம்பரம் கைது …சி.பி.ஐ., விளக்கம் :இன்று காங் ஆர்ப்பாட்டம்

டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து அவர் சி.பி.ஐ., அலுவலகத்தில் சி.பி.,ஐ.,இயக்குனர் மேற்பார்வையில் விசாரிக்கப்படுவார், நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சி.பி.ஐ., விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை , மத்திய பா.ஜ., அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது

சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று(ஆக.,22) காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக. தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial