அத்திவரதருக்கு 10 . 60 லட்சத்தை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளித்தார்.

அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் வருகை தந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் உற்சவத்தில் வைக்கப்பட்ட உண்டியலில் வசூலான தொகை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மொத்தம் 10 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 129 ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial