ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் நெல்லை திமுக எம்.பி.

நாகர்கோவில்-வேளாங்கண்ணி ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- நான் எம்.பி.யாக பதவி ஏற்ற உடன் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்படி தற்போது நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இரு முறை ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நேரத்தில் மதியம் 2.15 மணிக்கு பதிலாக மாலை 5 மணியாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

இந்த ரெயிலில் அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது இந்த ரெயிலில் எந்த ரெயில் நிலையத்தில் ஏறி, எந்த ரெயில் நிலையத்தில் இறங்கினாலும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.375 ஆகும். இதை மாற்றி மற்ற ரெயில்களில் உள்ளது போல் தூரம் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் வேளாங்கண்ணி செல்வதற்கும் முன்பதிவு கட்டணமும் அதிகமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.எனவே பயணிகள் நலன் கருதி நாகர்கோவில்-வேளாங்கண்ணி ரெயிலை அதிக கட்டணத்துடன் இயக்காமல், சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial