நடிகை ராதிகா பிறந்த நாள்

நடிகை ராதிகா இலங்கையில் கொழும்பு என்ற நகரில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ம் தேதி நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா.

நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்

ஹீரோயினாக இருக்கும் போதும் சரி, சப்போர்ட்டிங் நடிகையான பிறகும் சரி, போல்டான கதாபாத்திரங்கள் என்றால், இயக்குநர்கள் அணுகுவது நடிகை ராதிகாவை தான். ஒரு புறம் ‘கேளடி கண்மணி’, ‘பவித்ரா’ என படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, மறுபுறம் (1991) சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

70-களின் இறுதியில் ஹீரோயினாக அறிமுகமாகன இவர், பல்வேறு வித்தியாச பாத்திரங்களில் நடித்து விட்டார் பொதுவாக உச்சத்தில் இருக்கும் நடிகைகள், தங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் இருக்கும் சமயத்தில் சின்னத்திரைக்கு வர யோசிப்பார்கள்.

பட வாய்ப்புகள் குறைந்து போகும் பட்சத்தில், தொலைக்காட்சிக்கு விஜயம் செய்வார்கள். அப்படியே வந்தாலும், அதில் நிலைத்து நிற்பது என்பது மிகக் கடினமான ஒன்று. இந்த சவாலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ராதிகா.

ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனரும் இவரே, இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்களையும், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிக்கின்றார்.

.ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர்.

முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

1991-ல் டிடி சேனலில் ஒளிபரப்பான ‘பெண்’ சீரியல் மூலம் அறிமுகமான ராதிகாவை, தமிழ் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது

சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர். பிறகு, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ’வாணி ராணி’, ‘சந்திரக்குமாரி’ என தொடர்ந்து ராதிகாவின் சீரியல்கள் சன் டிவி-யில் ஒளிபரப்பானது.

ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சந்திரக்குமாரி சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகினார். முந்தைய சீரியல்கள் போல இதற்கு வரவேற்பு இல்லாததே காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியலுடன் ரசிகர்களை சந்திக்கிறார் ராதிகா. இது சம்பந்தமாக, ’சன் டிவி-யில் நாங்கள் ஆக்‌ஷனுக்கு திரும்பி விட்டோம். விரைவில் உங்களை சந்திக்கிறோம். ஆசிர்வதியுங்கள்’ என ஒரு ட்வீட்டும்,

’இயக்குநர் சமுத்திரக்கனி எனக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்களைக் கொடுக்கிறார். நாங்கள் இருவரும் சின்னத்திரைக்கு திரும்புவதை இது குறிக்கிறது’ என இன்னொரு ட்வீட்டும் போட்டிருந்தார் ராதிகா. இதனால் ராதிகாவின் புதிய சீரியல் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial