தொழுகை நடந்ததற்கு சாட்சி இருக்கா? நீதிபதிகள் கேள்வி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராம் லாலா தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றின் படத்தை தாக்கல் செய்து, அதில் சமஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார்.இந்த வழக்கில் முஸ்லிம்களும் சாட்சியம் அளித்தார்கள். முகமது ஹாசிம் என்பவர் அளித்த சாட்சியத்தில், மெக்கா எப்படி இஸ்லாமியர்களுக்கு புனிதமானதோ அதே போல அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு இஸ்லாமியர், இந்த இடத்தில் இந்து கோவில் இருந்து, அந்த கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆனால் அதனை இஸ்லாமியர்கள் மசூதி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, அந்த இடத்தில் தொழுகை நடந்ததாக ஏதேனும் சாட்சியங்கள் அப்போது கூறியதா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சி.எஸ்.வைத்தியநாதன், ஒரு சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்தபோது அந்த இடத்தில் தொழுகை நடைபெற்றதை தான் பார்த்ததில்லை என்று கூறியிருப்பதாக தெரிவித்தார். விசாரணை இன்றும் (புதன்கிழமை) தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial