திருநெல்வேலி – ஜபல்பூர் சிறப்பு ரயில் ரத்து

ஜபல்பூர் ரயில் நிலைய இருப்பு பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஜபல்பூரில் இருந்து 22.08.2019 அன்று புறப்பட வேண்டிய வண்டி எண் 02194 ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்

ற்றும் 24.08.2019 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02193 திருநெல்வேலி – ஜபல்பூர் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து 21.08.2019 அன்று புறப்பட வேண்டிய வண்டி எண் 15119 ராமேஸ்வரம் – மான்டுயாடிஹ் விரைவு ரயில் இட்டார்சி, போபால், பிணா, கட்னி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial