ஐந்தருவியில் குளிக்கத்தடை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பகுதியில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அருவிகளில் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 கிளைகளிலும் அதிகமான தண்ணீர் கொட்டியது.

இதனால் அங்கு குளிப்பது ஆபத்து என்பதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial