வைகோவுக்கு ஒராண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது கடந்த 2009ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது

கடந்த 2009ஆம் ஆண்டு ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் உரையாற்ற இதன் காரணமாக ஆயிரம் விளக்கு போலீசார் வைகோ மீது தேச துரோக வழக்கினை பதிவு செய்திருந்தனர். இதன் பின்னர் இடம் பெற்ற விசாரணைகளில் கடந்த 2017ஆம் ஆண்டு புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ, மே மாதம் ஜாமீனில் விடுதலையானார்

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு கோர்ட், வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. வைகோவுக்கு ஒராண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார். ராஜ்யசபா தேர்தலில் எம்.பி., ஆகும் கனவில் வைகோவிற்கு இந்த தீர்ப்பு இடியாக மனதில் இறங்கி உள்ளது

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தரப்பில் விசாரணை நீதிமன்றத்திலேயே ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைத் தண்டனையை ஒரு மாதம் நிறுவத்தி வைக்குமாறும் நீதிபதியிடம் வைகோ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial