ஏர்டெல் 3-ஜி சேவை நிறுத்தம்

 

 

 

இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள்அடுத்தடுத்து உள்ளன. இவற்றில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி சேவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த சூழலில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது3-ஜி சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படஉள்ளது. இதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரிரந்தீப் கூறுகையில், ‘கொல்கத்தாவில் 3ஜி மட்டும் தான் நிறுத்தப்படுகிறது. 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்குபாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாக 3ஜிக்கு செலவிடப்படும் 900 MHz-ஐ 4ஜிக்கு பயன்படுத்தி, 4ஜியை பலப்படுத்த முடியும். மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவேஉள்ளனர். அவர் அப்படியே 4ஜிக்கு மாறிவிடுவார்கள். மேலும், பெரும்பாலான மக்கள் இன்னமும் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே,2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித தங்குதடையும் இருக்காது’. இவ்வாறு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial