இரண்டாயிரம் பள்ளிகளை மூட அரசு திட்டம்

குறைவான மாணவர் சேர்க்கை உள்ளதாக 1,848 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கையே இல்லாததால், 4 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்திருந்தார். எக்காரணம் கொண்டு அரசுப்பள்ளிகள் மூடப்படாது என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில், தற்போது மாணவர்கள் சேர்க்கை 10க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுவரை தொடக்கக் கல்வித்துறை எடுத்துள்ள கணக்கெடுப்பில் மொத்தம் 1,848 தொடக்கப்பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களே இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 76 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டும் உள்ளனர்.இதனால், 1,848 பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு பயிலும் மாணவர்களை அருகிலுள்ள மற்ற அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய ஆலோசித்து வருகிறது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளுக்கு அருகில் என்னென்ன பள்ளிகள் உள்ளது, இரண்டு பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது, குறுக்கே ஆறு, தேசிய நெடுஞ்சாலை, ரயில் தண்டவாளம் ஏதும் உள்ளதா என்பது குறித்த விபரங்களை தெரிவிக்கும்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial