அட்ரா சக்கை…. காஞ்சிக்கு அடுத்தடுத்து ரயிலு

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் தற்போது அத்திவாரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் அத்திவாரதரை தரிசனம் செய்துள்ளனர் இதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக காஞ்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாம்

சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நாளை அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணி, மதியம் 12.00 மணி, பிற்பகல் 03.10 மணி மற்றும் மாலை 05.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனை போலவே காஞ்சிபுரத்தில் இருந்து காலை 07.30 மணி முதல் இரவு 07.45 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரைக்கு என 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial