500 புதிய பேருந்துகளின் சேவை …முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் சென்னை அரசு போக்குவரத்து கழகங்களின் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம்,டிஜிபி திரிபாதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை தலைமையகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் 137 மீட்பு உபகரணங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதனிடையே கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பின் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 5,000 புதிய பேருந்துகளை தயாரிக்க ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 4,000 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,000 புதிய பேருந்துகளும் விரைவில் பொமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *