வலுதூக்கும் போட்டி -சட்டசபை உறுப்பினர் நீ.ராஜா வெற்றி

0
93

சங்கரன்கோவில் சட்டசபை உறுப்பினர் நீ.ராஜா வலுதூக்கும் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.

மாநில அளவிலான போட்டியில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ முதல் இடம். தேசிய அளவிலான போட்டிக்கு காமன்வெல்த் போட்டியிலும் அவர் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வலுதூக்கும் வீரரான இவர் தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 100 முதல் 150 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பெற்றாா். இதன் மூலம் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கும், நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here