மாஞ்சோலை செல்ல அனுமதி பெறுவது எப்படி?

0
106

▶️ மாஞ்சோலை செல்ல வேண்டுமென்றால் அம்பாசமுத்திரத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

▶️ நாளொன்றுக்கு 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், 3 நாட்களுக்கு முன்னதாகவே மேற்கூறிய அலுவலகம் சென்று, அவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தில் எந்த தேதியில் செல்கிறீர்கள், வண்டி எண், எத்தனை நபர்கள் பயணிக்கிறீர்கள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். (யாராவது ஒருவரின் ஆதார் கார்டு அவசியம்)

▶️ மாஞ்சோலையில் வனத்துறைக்கு சொந்தமான அறையில் தங்கப்போகிறீர்கள் என்றால் kmtr.co.in என்ற இணையதளத்திலேயே பதிவு செய்து சென்று வரலாம்.

▶️ டூ-வீலர், ஆட்டோ அனுமதி கிடையாது. நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

▶️ சூழல் சுற்றுலா கட்டணம் ரூ.950, ஒரு வாகனத்திற்கு ரூ.50, ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் ரூ.30 என 3 விதமான கட்டணம் உண்டு. இந்த கட்டணத்தை நீங்கள் மாஞ்சோலை எப்போது செல்கிறீர்களோ அன்றைய நாளில் மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் கட்ட வேண்டியதிருக்கும்.

▶️ குண்டுங்குழியுமான மலைப்பாதை என்பதால் Innova, Bolero, Scorpio போன்ற Suv type கார்களை மட்டுமே அனுமதிப்பார்கள்.

▶️ மாஞ்சோலையை சுற்றிப்பார்க்க மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி என்பதால், காலை 8 மணிக்கு மணிமுத்தாறு சோதனைச்சாவடியை அடைந்து விடுவது நல்லது.

▶️ மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினரின் சோதனைக்குப் பிறகே வாகனம் அனுமதிக்கப்படும் என்பதால் மது பாட்டில், பிளாஸ்டிக், ட்ரோன் கேமரா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here