பாஸ் டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடியில் 7 அரசு விரைவு பஸ் நிறுத்தம்

0
58

பாஸ் டேக்கில் பணம் இல்லாததால் கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு விரைவு பஸ்கள் 5 மணி நேரம் நிறுத்தி வைப்பு.

பாஸ் டேக்கில் பணம் இல்லாததால் கயத்தாறு சுங்கச்சாவடிகளை 5 மணிநேரமாக அரசு விரைவு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. நாடு முழுவதும் சுங்கச் சாவடி மையங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அரசு பஸ் மற்றும் அரசு விரைவு பஸ்கள் அரசு சார்பில் பாஸ்டேக் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூர் சுங்க சாவடியில் சென்னையில் இருந்து நெல்லை கன்னியாகுமரி நாகர்கோவில் மார்த்தாண்டம் செல்லக்கூடிய 7 அரசு விரைவு பஸ்கள் கடக்கும் போது அந்த அக்கவுண்டில் போதிய பணம் இல்லை. இதையடுத்து அந்த 7 பஸ்களை அனுமதிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் அந்த பஸ்களில் வந்த பயணிகள் பின்னால் வந்த மற்ற அரசு பஸ்கள் மூலமாக சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து பாஸ்டேக்கில் போதிய பணம் இல்லை என்பது குறித்து அரசு விரைவு பஸ் ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சுங்கச்சாவடி கட்டணத்தை நேரடியாக செலுத்தி விட்டு செல்ல அறிவுறுத்தியது. அரசு விரைவு பஸ் ஊழியர்கள் நேரடியாக பஸ் கட்டணத்தை சேர்த்து விட்டு பஸ்களை எடுத்துச் சென்றனர். போதிய கட்டணம் இல்லை என்பதால் 5 மணி நேரமாக அரசு விரைவு பஸ்கள் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு சர்வரில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here