பால் அருவியில் குளிக்க கேரள அரசு அனுமதி

0
95

கொரோனா குறைந்து வருவதால் பாலருவியில் குளிக்க கேரள அரசு அனுமதி. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் சென்றனர். பாலருவி செங்கோட்டைக்கு அருகில் கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுற்றுலா பயணிகள் புளியரை கோட்டை வாசல் வழியாக ஆரியங்காவு சோதனைச் சாவடி அருகில் செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் 300 அடி உயரமுள்ள இந்த நீர்வீழ்ச்சியில் காய்ச்சிய வெள்ளியை உருக்கியதுபோல் விழும் தண்ணீரில் குளித்து மகிழவும் அழகை பார்த்து ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அருவியானது பல்வேறு மூலிகைகளை தொட்டு வருவதால் நோய்களும் குணமாகும். பெண்கள், ஆண்கள் தனித்தனியாக குளிக்க தனியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பாக விரும்பி குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளும் அருவிக்கும் வருகை தருவர். கொரோனா காரணமாக அருவிக்கு செல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரள அரசு தடை விதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதையொட்டி, கேரளாவின் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலருவிக்கு செல்லவும், குளிக்கவும் இன்று முதல் கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இன்று ஏராளமானவர்கள் அங்கு சென்று ஆனந்த குளியலிட்டனா். பிரசித்தி பெற்ற குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிக்கு அனுமதி வழங்கியுள்ளதால் தென்காசி மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளவர்களும் இன்று அருவிக்கு படையெடுத்துச் சென்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here