நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை

0
64

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது.

நேற்று நகர்ப்புறங்களில் வெயில் அடித்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1.365 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது அணையில் இருந்து விநாடிக்கு 1.405 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் பாதுகாப்பு கருதி 136.50 அடி அளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையில் 139.37 அடி நீர்மட்டம் உள்ளது.மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 10 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 84.70 அடியாக உள்ளது. கடனாநதி அணை 83 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாகவும் கருப்பாநதி அணை 68.24 அடியாகவும் நிரம்பி உள்ளது.தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் இன்று சற்று தணிந்தது. அதேநேரம் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபத்தில் வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. சந்திப்புகள் மண்டபத்தையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தணிந்தது ஒரு சிலர் மட்டும் குளித்து செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here