நெல்லை – சங்கனாபுரத்தில் 20 ஆடுகள் திருட்டு

0
59

நெல்லை மாவட்டம் பழவுா் சங்கனாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவா் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள தனது இல்லத்தில் 20 ஆடுகளை தட்டிகளால் வேயப்பட்ட பகுதியில் அடைத்து வைத்துள்ளார்.

நேற்று சென்று பார்த்தபோது அந்த 20 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீஸார் ஆடுகளைத் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here