நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

0
57

நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

நெல்லை அரசு மருத்துவகல்லூரி ஆய்வகத்தில் 1061 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தனியார் வங்கிகளிலும் பலருக்கு கொரோனா பாிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மொத்தம் 19 பேர் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநகரில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராஜகோபாலபுரம் மூன்றாவது தெருவில் ஒரே முகவரியில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமாள்புரம் டிரைவர் காலனியில் ஒரே முகவரியில் 2 பேருக்கு பாதிப்பு உள்ளது. தாமிரபதி காலனி கேடிசி நகரில் ஒரே முகவரியில் 2 பேருக்கும், பாளை பெருமாள் வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவி உள்ளது.

நாங்குநேரி வட்டத்தில் 3 பேருக்கும், இராதாபுரம் வட்டாரத்தில் இருவருக்கும், அம்பை, பாளை, வள்ளியுா், சேரன்மகாதேவி களக்காடு ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் சற்று ஏறுமுகமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here