தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ஜெகன் நீக்கம்

0
56

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பில்லா ஜெகன் நீக்கம்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் என்ற கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டே இருந்துள்ளார் அப்போது அங்கு வந்த விருந்தினர் மாளிகை காவலாளி சதாம்சேட் என்பவர் அவர்களை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பில்லா ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சதாம்சேட்டை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சதாம்சேட் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் மற்றும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here