தென்காசி – பஸ்ஸின் முன்டயர் வெடித்து பயணிகள் அதிா்ச்சி

0
54

தென்காசியில் மேம்பாலத்தில் சென்றபோது அரசு பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு. அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு .

தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்கோட்டை -ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், நெல்லை – தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுரண்டை அரசு நகர பேருந்து புறப்பட்டு சென்றது அந்த பஸ் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக பஸ்ஸை நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

மேம்பாலத்தில் பஸ் நடுவழியில் நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் பழுதான பஸ்ஸின் டயர் மாற்றப்பட்டு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here