தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

0
64

கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

வரும் 20.10.2021 & 21.10.2021 அன்று தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி திண்டுக்கல் தென்காசி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், 20.10.2021, 21.10.2021 ஆகிய தினங்களில் கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here