கேரளா-மனைவியை பாம்பை ஏவி கடிக்க வைத்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

0
72

மனைவியை பாம்பை ஏவி கடிக்க வைத்து கொடூரமாகக் கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை நீதிமன்றம் இன்று அறிவிப்பு!!
மனை­வியை பாம்பை ஏவி­விட்­டுக் கடிக்க வைத்து கொடூ­ர­மாக கொலை செய்த கேர­ளா­வைச் சாா்ந்த கண­வரை குற்­ற­வாளி என்று அறி­வித்த கொல்­லம் நீதி­மன்­றம் சம்பந்­தப்­பட்ட நப­ருக்கு இரட்டை ஆயுள் தண்­டனை
வழங்­கி­யுள்­ளது. கேரள மாநி­லத்­தில் விஷப்­பாம்­பு­களை கடிக்கவிட்டு கொலை செய்­யும் கொடிய செயல் சமீபகால மாக அதி­க­ரித்து வரு­கி­றது. இப்­படி நடந்த ஒரு கொலை சம்­பவம் கேரளா மட்­டு­மின்றி நாடு
முழு­வதை­யும் உலுக்­கி­யது.

கேரள மாநி­லம் கொல்லத்­தைச் சேர்ந்த உத்ரா.இவருக்­கும் பத்­தனம்­திட்டா மாவட்­டத்­தைச் சேர்ந்த வங்கி அதி­காரி சூரஜ் என்­பவ­ருக்­கும் கடந்த 2018-ல் திரு­ம­ணம் நடைபெற்­றது.இவர்­க­ளுக்கு ஒரு குழந்தை உள்­ளது. இவர்­கள் குடும்பத்­து­டன் அரூர் பகு­தி­யில் வசித்து வந்­துள்­ளனர். கடந்த ஆண்டு தொடக்­கத்­தில் உத்­ராவை விஷப்­பாம்பு ஒன்று கடித்­துள்­ளது. இதில் உயி­ருக்குஆபத்­தான நிலை­யில் அவர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்­தார். உத்­ராவை ஏற்கனவே பாம்பு ஒருமுறை கடித்த நிலையில், இரண்டாம் முறை பாம்பு கடித்­ததால் அனை­வ­ருக்­கும் சந்­தேகம் எழுந்­தது. ஏனெ­னில் உத்ரா 2-வது மாடி­யில் உள்ள ஏ.சி. அறை­யில் படுத்­தி­ருக்­கும்­போது அவரை பாம்பு கடித்­துள்­ளது. அந்த அறை­யின் ஜன்­னலை கூட திறக்க வாய்ப்­பில்லை என்­ப­தால் விஷப்­பாம்பு எப்­படி வந்­தது? என்ற கேள்வி எழுந்­தது. புகா­ரின்­பே­ரில் இதனை விசா­ரித்த போலீ­சா­ருக்கு மேற்­கண்ட சந்­தேகம் துளைத்­தெ­டுத்­தது. இந்த நேரத்­தில் போலீ­சா­ருக்கு ஒரு க்ளூ கிடைத்­தது. அதாவது எப்­போ­துமே தாம­தமாக எழுந்­தி­ரிக்­கும் சூரஜ், மனை­வியை பாம்பு கடித்த அந்த நாளில் மட்­டும் அறையில் இருந்து சீக்­கி­ரமே எழுந்து சென்­றுள்­ளார். இதனால் போலீ­சா­ரின் பார்வை கண­வர் சூரஜ் பக்­கம் திரும்பவே தங்­கள் பாணி­யில் அவரை விசா­ரித்­தனர். அப்­போது வர­தட்­சணைக்­ கா­கத்­தான் உத்­ராவை கொன்­று­விட்­டதாக அவர் உண்­மையை ஒப்­புக்கொண்­டுள்­ளார். ஏற்­கனவே ஒரு­முறை பாம்பை கடிக்க வைத்து கொல்ல நடந்தமுயற்­சி­யில் உத்ரா தப்பி விட்­டார். இதனால் அவர் இரண்­டாவது முறை உத்­த­ரா­வுக்கு தூக்க மாத்­திரை கொடுத்துபடுக்க வைத்து பாம்பை கடிக்க வைத்து கொன்­றுள்­ளார். பாம்­பாட்­டி­யி­டம் பணம் கொடுத்து விஷப்­பாம்பை வாங்கி அவர் இந்த கொலை சம்­பவத்தை அரங்­கேற்­றி­யுள்­ளார்.

ஏற்­கனவே உத்ரா 100 பவுன் நகை, 10 லட்­சம் ரூபாய் ரொக்­கம், சொத்து, கார் பல கோடிக்­க­ணக்­கில் வர­தட்­சணையை கொட்டி கொடுத்­துள்­ளார். ஆனா­லும் சூரஜ் கூடு­தல் வர­தட்­சணை கேட்ட நிலை­யில், உத்ரா அதற்கு மறுத்­ததால் கொடூ­ர­மாக கொலை செய்­தது போலீ­சா­ருக்கு தெரி­யவந்­தது. இந்த கொலை­யில் நேரடி சாட்­சி­யம் ஏதும் இல்­லாததால், பாம்பை வைத்தே குற்றத்தை நிரூ­பித்­தனர் போலீ­சார். அதா­வது பாம்பு எப்படி
கடித்­தி­ருக்­கும் என்­பதை அறிய, உத்ரா போன்ற உரு­வபொம்­மையை அறையில் படுக்கை வைத்து. பாம்பை விட்டு பரி­சோதனை செய்­தனர். நாடு முழு­வ­தும் பெரும் அதிர்ச்சி அலை­களை ஏற்­படுத்­திய இந்த வழக்கு கொல்­லம் கூடு­தல்அமர்வு நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது. சமீ­பத்­தில் இது தொடர்­பாக 100 பக்க குற்றப்பத்திாிக்கையை போலீ­சார் தாக்­கல் செய்­தனர். இந்த நிலை­யில் இந்த வழக்­கில் தொடர்­பு­டைய சூரஜ்
குற்ற­வாளி என்று கொல்­லம் கூடு­தல் அமர்வு நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. தீர்ப்பு விவகா­ரம் இன்று அறி­விக்­கப்­பட்­டது. கூடு­தல் வர­தட்­சணைக்­காக பாம்பை ஏவி விட்டு மனை­வி­யைக்கொன்ற கண­வ­ரின்
செயல்­பாடு கடும் கண்­டனத்­திற்­கும் தண்­டனைக்­கும் உரி­யது சம்­பந்­தப்­பட்ட நப­ருக்கு இரட்டை ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது என்று கொல்­லம் கூடு­தல் அமர்வு நீதி­மன்ற நீதி­பதி இன்று வழங்­கிய தீர்ப்­பில்
குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here