கேரளா – இடுக்கி அணை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

0
87

கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் இடுக்கி அணை நீர்மட்டம் 2,391.36 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ‘ப்ளூ அலர்ட்’ விடுக்கப்பட்டது.இந்நிலையில் இடுக்கியில் தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,450 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 2,397 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அணைக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 2,397.85 கன அடியாக உயரும் பட்சத்தில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ‘ரெட் அலர்ட்’டும் நீர்மட்டம் 2,398.85 கன அடியாகும்போது அணை திறக்கப்படும் எனவும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here