குலசை தசரா திருவிழாவை பற்றி மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு
1)கொடியேற்றம் 1ம் திருநாட்களுக்கு முன்பே கடற்கறையில் கும்பம் எடுத்து கொள்ள வேண்டும்
2)1.ஆம் திருவிழா அன்று பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
3) திருக்காப்புகளை இரண்டாம் திருவிழா நாள் முதல் திருக்கோயில் அலுவலகத்தில் சென்ற ஆண்டு போலவே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
4) திருக்காப்புகளை பெறுவதற்கு தசராகுழுக்களுக்கு ஒரு நபர்க்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
5) தசராகுழுவில் அல்லாத தனிநபர் பக்தர்களுக்கு தலா ஐந்து (5) காப்புகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.
6) திருவிழா நாட்களில் இடையில் வரும் வெள்ளி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
7) மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அரசின் அறிவுறுத்தலின் படியும் குலசேகரன் பட்டினம் காவல்துறையின் அறிவுறுத்தலின் படியும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமோ தரிசணத்துக்கு அணுமதி
8) தசரா வேடம் அணிந்த பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
9) தசராகுழுவினர்கள் தங்கள் ஊர்களிலே தசரா நிகழ்வுகளை நடத்தி கொள்ள அணுமதி
10.தசரா நிகழ்வுகளில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு (டிஸ்கோ) டன்ஸ் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது மீறும் பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.