கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மரபு நடை

0
52

நெல்லை அருங்காட்சியகம் மற்றும் பரணி வரலாற்று மையம் சார்பாக உலக மரபு வாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மரபு நடை மேற்கொள்ளப்பட்டது.

உலக மரபு வாரத்தினையொட்டி தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் பார்வையிடப்பட்டது.

நெல்லை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையில் கல்லூரி மாணவிகள் இந்த மரபு நடை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வெட்டுவான் கோயில் சுற்றியுள்ள மலைப்பகுதிகள்,சமணர் பள்ளி,படுகை ஆகியவற்றை மாணவிகள் பார்வையிட்டனர்.

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கந்தையா இந்த வரலாற்று தலங்கள் பற்றி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்த மரபு நடை நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா,கலையாசிரியர் சொர்ணம்,கவிஞர் ந.சுப்பையா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here