ஓ ஓ … தமிழகத்தில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா?..

0
83

கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதியில் இந்த ‘டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ”மதுபிரியர்கள் வாங்கும் மதுபானத்திற்கு ஏற்ப ரசீது வழங்கப்படும். இந்த கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை. விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’ என்று கூறி செல்போன் எண் குறிக்கப்பட்ட அறிவிப்பு அட்டைகள் கடையின் முகப்பு பகுதியில் தொங்க விடப்பட்டுள்ளது.

வாய் பிளந்த குடிமகன்கள்
இந்த டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் ”என்ன.. நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா” என்று ஒரு நிமிஷம் வாய் பிளந்து நிற்கின்றனர். அட்டையில் குறிப்பிட்டபடி இந்த டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இப்படி மாற வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here