ஓட்டப்பிடாரம் அருகே ​இரவில் லாரி மோதி 5 வயது சிறுவன் பலி

0
47

ஓட்டபிடாரம் அருகே இரவில் லாரி மோதி 5 வயது சிறுவன் பலி. 50 அடி தூரம் எடுத்துச் செல்லப்பட்டதால் பரிதாபம்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அரசடியைச் சோ்ந்தவர் மாரிமுத்து வயது (38) இவர்களுக்கு ஒரு மகளும் ஆதிஸ்வரன் 5 என்ற மகனும் உள்ளனர் .நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிஸ்வரன் விளையாடிக்கொண்டிருந்தான். இரவு 7 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்திற்கு சென்ற லாரி ஆதிஸ்வரன் மீது பயங்கரமாக மோதியது . இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தான்.

சி றுவனின் உடலில் சிக்கிய சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது .இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர் .லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர் .ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here