எஸ்டேட் மணி மீது குண்டர் சட்டம் SP அதிரடி

0
568

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி மாவட்டம் 01.10.2021
மானூர் காவல் நிலையத்தில், கொலை வழக்கில் எதிரியான திருநெல்வேலி வட்டம், தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் மணி என்ற எஸ்டேட் மணி (39) என்பவர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர், காவல் ஆய்வாளர், ராமர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 01.10.2021 இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். என திருநெல்வேலி மாவட்ட காவல் துறையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here